1962 ஜூன் மாதம் கல்லூரி தொடங்கப்பட்ட நாள் முதல் மொழிப்பாடமாக தமிழ் பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றது. சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு பின் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு தற்போது காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றது.
1974 ஜூலை மாதம் தமிழ் இளங்கலை வகுப்புகள் தொடங்கப்பட்டது. பட்ட வகுப்பில் மொழிப் பாடமாக பயிற்றுவிக்கப்பட்ட தமிழ் விருப்பப் பாடமாக்கப்பட்டது. தமிழக வரலாறும் பண்பாடும், தமிழ் இலக்கிய வரலாறும் துணைப்பாடமாகப் பயிற்றுவிக்கப்பட்டன.
காலத்திற்கேற்ற வகையில் பல்கலைக் கழகத்தாரால் திட்டமிடப்பட்ட பாடத்திட்டங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன.
கல்லூரி தொடங்கிய நாள் முதல் மிகச் சிறந்த பேராசிரியர்கள் திருமதி எம். வாசுகி (முதல் பேராசிரியர்), செல்வி கே. ஜெகதாம்பாள், வி. கனகசுந்தரம், லலிதா டேவிட், க. சரஸ்வதி, எ. வள்ளியம்மாள், வி. செல்லம்மாள், ஆர். எம். பார்வதி, வி. லலிதா, என். கௌரி, செல்வம் பிரனான், காமாட்சி, உண்ணாமலை, நவநீத ஜெயகிருஷ்ணன், ஜெ. லெக்ஷ்மி, ராமலெக்ஷ்மி, பவானி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
முனைவர் தேவதத்தா, முனைவர் சரசுவதி இராமநாதன், முனைவர் லெக்ஷ்மி நடராசன் ஆகியோர் முனைவர் பட்டம் பெற்று பணியாற்றியவர்கள். 1975-லிருந்து 2006 வரை திருமதி கல்யாணி, திருமதி ஸ்ரீ வள்ளி ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
திருமதி எம். வாசுகி, செல்வி கே. ஜெகதாம்பாள், செல்வி லலிதா டேவிட், செல்வி எ. வள்ளியம்மாள், முனைவர் தேவதத்தா, முனைவர் சரசுவதி இராமநாதன் ஆகியோர் துறை தலைவர்களாகப் பணியாற்றியவர்கள். 1996 அக்டோபர் முதல் 2006 வரை திருமதி கல்யாணி துறை தலைவராகப் பணியாற்றியுள்ளார்.
மாணவியரின் மொழித்திறனை வளர்ப்பதற்கும் படைப்பாற்றல் திறனை வளர்ப்பதற்கும் துறையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு. மாணவியருக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
போட்டிகளில் மாணவியர் பங்குபெற்று பரிசுகள் பெறுவதற்கு ஊக்கமளிக்கப்படுகின்றது.
கல்லூரி தொடங்கிய நாள் முதல் தமிழ் இலக்கிய மன்றம் செயல்பட்டு வருகின்றது. சிறந்த பேச்சாளர்கள், கவிஞர்களை அழைத்து கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, கவிதைப்போட்டி, பாட்டுப் போட்டி போன்றவை மாணவியருக்கு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவியருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது. பேச்சாளர்களை அழைத்து பட்டிமன்றங்கள், கவியரங்கங்கள் நடத்தப்பட்டுள்ளன. மாணவிகளுக்க
ு பட்டிமன்றங்கள் நடத்தப்பட்டுள்ளன. கல்லூரிக்கு வெளியே பிற கல்லூரி இலக்கிய மன்றங்கள், இலக்கிய கழகங்கள் நடத்தும் போட்டிகளில் மாணவியர் பங்கு பெற்று வருகின்றனர்.
21.12.2001 அன்று திரு.சு.சமுத்திரம் அவர்கள் தலைமையில் பல்கலைக்கழக மானிய உதவியுடன் கருத்தரங்கும், கலந்துரையாடலும் நடத்தப்பட்டன.
20.07.2005 அன்று பல்கலைக்கழக மானிய உதவியுடன் தினமணி பத்திரிக்கை அலுவலகத்திற்குச் சென்று பத்திரிகைகள் குறித்து மாணவியருக்கு விளக்கப்பட்டது. கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
தஞ்சை பெரிய கோவிலுக்கு வரலாற்றுத் துறையுடன் தமிழ்த்துறையும் இணைந்து மாணவியரை அழைத்துச் சென்று கள ஆய்வு நடத்தப்பட்டது. கல்வெட்டு எழுத்துக்கள் குறித்தும், அவற்றை வாசிக்கும் முறை குறித்தும் பேராசிரியர்கள் மாணவியருக்கு விளக்கியுரைத்தனர்.
பாட திட்டத்தில் படைப்பாற்றல் என்னும் பகுதி இருப்பதால் மாணவியரின் படைக்கும் திறனை வெளிப்படுத்தும் விதத்தில் மாணவியரை எழுதச் செய்து மாணவியர் எழுதிய கவிதைகள், நாடகங்கள், கதைகள், தொகுத்து துறையில் வைக்கப்பட்டுள்ளன. நாட்டுப்புற இலக்கியங்களைப் பற்றி மாணவியர் அறிந்து கொள்ளும் விதத்தில் மாணவியரை பழமொழிகள் விடுகதைகள் தொகுக்கச் செய்து இதழாக ஆக்கப்பட்டுள்ளது.
2009 ஆம் ஆண்டிலிருந்து திருமதி சேது கல்பனா, திருமதி அருள் ரேவதி ஆகியோர் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றயுள்ளனர்.
2013 டிசம்பரிலிருந்து முனைவர் சு. அர. கீதா, முனைவர் மு. பஞ்சவர்ணம், முனைவர் கோ. ரோ. கேபா ஜெயின் ஆகியோர் உதவிப் பேராசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
2015 ல் சிங்கப்பூர் சிம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பதினான்காம் தமிழ் இணையதள மாநாட்டில் முனைவர் மு. பஞ்சவர்ணம் அவர்கள் கணித்தமிழ் அகராதிகள் எனும் தலைப்பில் தம் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்கள்.
2016-ல் அந்தமானில் காரைக்குடி கம்பன் கழகமும் அந்தமான் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய ‘கம்பனில் இயற்கை’ எனும் தலைப்பில் நடைபெற்றது. அம்மாநாட்டில் முனைவர். சு. அர. கீதா ‘உழவரின் நிலை அன்றும் இன்றும்’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.
2016-ல் மைசூருவில் எட்டு நாட்கள் நடைபெற்ற ‘இயற்கையான மொழி செயலாக்கத்தில் பெண்கள்’ என்ற நாடு தழுவிய பயிலரங்கத்தில் முனைவர் மு. பஞ்சவர்ணம் அவர்கள் கலந்து கொண்டார்.
காரைக்குடி கம்பன் கழகமும் அந்தமான் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய ‘கம்பனில் இயற்கை’ எனும் தலைப்பில் நடைபெற்றது. அம்மாநாட்டில் முனைவர். சு. அர. கீதா ‘உழவரின் நிலை அன்றும் இன்றும்’ எனும் தலைப்பில் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்தார்.
கணினித் தமிழ் பேரவையும் சீதாலெட்சுமி ஆச்சி மகளிர் கல்லூரியும் இணைந்து மாணவியருக்கு கணித் தமிழ் பயிலரங்கு நடத்தியது. இப் பயிலரங்கில் பயிற்றுநராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. பாண்டி மற்றும் கணினித் துறைத்தலைவர் முனைவர் செந்தில்ராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மாணவியருக்கு பயிற்சி அளித்தனர். மேலும் மாணவியருக்கு ஆண்டுதோறும் இலக்கிய மன்றப் போட்டிகள் நடத்தி மாணவியரை பேராசிரியர்கள் ஊக்குவித்து வருகின்றனர்.
நூலகம்
தமிழ்த்துறை நூலகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றது. இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் உறுதுணையாக உள்ளன. பிற கல்லூரிகளில் இருந்து வரும் போட்டிகளுக்கு செல்லும் மாணவிகளுக்கு குறிப்புகள் எடுப்பதற்கு பயன்படுகின்றன. இந்த புத்தகங்கள் மாணவிகளின் அறிவுத்திறனை வளர்க்கின்றதன.
செம்மொழியாம் தமிழ்மொழியின் வளர்ச்சிக்கு இக்கல்லூரியின் பேராசிரியர்களும், மாணவர்களும் சிறப்புடன் பணியாற்றி வருகின்றனர்.
தமிழ்த்துறை நூலகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தில் இருநூறுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த புத்தகங்கள் மாணவர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் உறுதுணையாக உள்ளது. பிற கல்லூரிகளுக்கு போட்டிகளில் பங்கு பெற செல்லும் மாணவிகளுக்கு இந்த நூலகம் உதவிகரமாக உள்ளது. மேலும் பல்கலைகழக தேர்வுகளுக்கு மாணவிகள் தங்களை தயார் படுத்தவும் இந்த நூலகம் பயன்படுகிறது. பொது அறிவு சார்ந்த புத்தகங்களும் இடம் பெற்றுள்ளது கூடுதல் சிறப்பு. இதனால் மாணவிகளின் அறிவுத்திறன் மேம்படுகிறது. இந்த நூலகத்தில் மேலும் புத்தகங்களை சேர்ப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து துறை மாணவிகளும் இந்த நூலகத்தை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறார்கள்.
மாத்திரை கணினி (Tablet Computer)
மாத்திரை கணினி தமிழ்த் துறையில் பயன்படுத்தப்படுகிறது. செம்மொழியாம் தமிழ் மொழியின் இலக்கியம் மற்றும் இலக்கணம் சார்ந்த தகவல்கள் இணையதளத்தில் அதிக அளவில் உள்ளது. மேலும் நாழிகைகளின் ஊடாக சமீபத்திய ஆய்வு கட்டுரைகளை படிப்பதற்கு இந்த வசதி மிகவும் பயன்படுகிறது.
மாணவிகள் பல்கலைத் தேர்வுகளில் நன்கு சாதித்து வருகிறார்கள். அத்துடன் இத்துறையின் பணி முடிவடைவதில்லை. இன்று பல முன்னாள் மாணவிகள் பல துறைகளில் சாதிப்பதற்கு தலைமைப் பண்பை வளர்க்க இத்துறை அமைத்து கொடுத்த தளங்களும் ஒரு காரணம். கல்லூரியில் பல்வேறு போட்டிகளை ஏற்பாடு செய்வதுடன் பிற கல்லூரிகளுக்கு போட்டிகளில் மாணவிகள் பங்கு பெற ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். பல மாணவிகள் வானொலி மற்றும் தொலை காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்றுள்ளார்கள். மாணவிகள் இது போன்ற நிகழ்வுகளுக்கு செல்லும் போது பேராசிரியர்களும் உடன் சென்று அவர்களை ஊக்கப்படுத்துவது கூடுதல் சிறப்பு.
மாணவிகள் பேசும் போது பிற மொழி கலப்பில்லாமல் பேச ஊக்கப்படுத்தப் படுகிறார்கள். அறிவியல் மற்றும் தொழில் நுட்பங்கள் துறைகளுக்கு தேவையான கலை சொற்கள் உயரிய மொழியாம் தமிழ் மொழியில் உருவாகவேண்டியதின் அவசியத்தை, அவைகளை பயன்படுத்த வேண்டியதன் தேவை போன்றவைகள் மாணவிகளுக்கு உணர்த்தப்படுகிறது.
கணினி தமிழ் இன்றைய முக்கிய தேவை. இதனை மனதில் கொண்டு 2017-2018 கல்வியாண்டில் மாணவிகளுக்கு தமிழ் இணைய கல்வி கழகத்துடன் இணைந்து பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக பிற கல்லூரிகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு பரிசு பெற்றவர்கள்
27.12.2013 அன்று தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலைக் கல்லூரி நிறுவனர் நாள் விழாவில் இலக்கிய போட்டிகள் நடைபெற்றன. இக் கல்லூரியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் நம் கல்லூரி மாணவி ந. சௌமியா, மூன்றாம் ஆண்டு கணிதம் முதல் பரிசாக 1000 ரூபாய் ரொக்கப் பரிசும் சான்றிதழும் பெற்றார்.
நம் கல்லூரி மாணவி வெ.பத்மராகவி, இரண்டாம் ஆண்டு கணிதம் பேச்சுப் போட்டியில் இரண்டாம் பரிசாக ரூபாய் 500–ம் சான்றிதழும் பெற்றார். அக்கல்லூரியில் நடைபெற்ற கவிதைப்போட்டியிலும் நம் மாணவி வெ. பத்மராகவி பங்குபெற்று மூன்றாம் பரிசாக ரூபாய்.500 –ம் சான்றிதழும்
பெற்றார்.
5.1.2014 அன்று கோவிலூர் குறள்நெறிக்கழகம் நடத்திய பேச்சுப் போட்டியில் நம் மாணவி ந. சௌமியா, மூன்றாம் ஆண்டு வேதியியல் இரண்டாம் பரிசினைப் பெற்றார்.
15.2.2014 அன்று கே.எல்.என் தொழில் நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற “அம்மாவின் பல்நோக்குதிட்டம் 2023” என்ற பேச்சுப்போட்டியில் ஆறுதல் பரிசாக ரூபாய்.300 பெற்று வந்தார்.
தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக 17.8.2014 அன்று கண்ணதாசன் சமூகநல அறக்கட்டளை நடத்திய கட்டுரைப் போட்டியில் ஆங்கிலத்துறையை சார்ந்த இரண்டாமாண்டு மாணவி நா.பிச்சம்மாள் இரண்டாம் பரிசு பெற்றார். மேலும் பேச்சுப்போட்டியில் மூன்றாமாண்டு கணிதவியல் துறையை சார்ந்த வெ. பத்மராகவி மூன்றாம் பரிசினை பெற்றார்.
பாரதியார் பாடல் இசைப்போட்டியில், மூன்றாமாண்டு கணிதத்துறை மாணவி ஆர். ஜெயஸ்ரீ முதல் பரிசையும், முதலாமாண்டு கணிதத்துறை மாணவி கே. சங்கீதா இரண்டாம் பரிசையும், முதலாமாண்டு ஆங்கிலத்துறை மாணவி எஸ். அமிர்தவள்ளி மூன்றாம் பரிசையும் பெற்றனர். இவ்வாறு மூவிடத்தையும் நம் மாணவிகளே பெற்று நம் கல்லூரிக்குப் பெருமை சேர்த்தனர்.
கண்ணதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் மூன்றாமாண்டு கணிதத்துறை மாணவி ஆர். ஜெயஸ்ரீ முதல் பரிசையும், முதலாமாண்டு கணிதத்துறை மாணவி கே.சங்கீதா இரண்டாம் பரிசையும் பெற்றனர்.
மதுரை தியாகராசா கல்லூரியில் நிறுவனர் நாளுக்காக நடைபெற்ற ஆசிரியர் மன்ற விழாவில், இரண்டாமாண்டு வேதியியல் துறை மாணவி நே. சௌந்தர்யா மூன்றாம் பரிசினைப் பெற்றார்.
27.12.2014 அன்று, தேவகோட்டை ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கல்லூரியில் நடைபெற்ற நிறுவனர் நாள் விழாப் போட்டியில் நம் கல்லூரி, மூன்றாமாண்டு கணிதவியல் துறை மாணவி வெ. பத்மராகவி பேச்சுப்போட்டியில் முதல் பரிசாக ரூபாய் 1001-ம் சான்றிதழும் கேடயமும் பெற்றார். மேலும் கவிதைப் போட்டியில் இரண்டாம் பரிசாக ரூபாய் 701-ம்
சான்றிதழும் பெற்றார்.
11.09.2015 அன்று காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் அறிஞர் அண்ணா பிறந்த நாள் விழாப் போட்டிகள் நடைபெற்றன. அந்த போட்டிகளில் நமது கல்லூரி மாணவி ச. அழகு சிவகாமி, இளங்கலை இரண்டாமாண்டு, கணிதம் அவர்கள் கட்டுரைப் போட்டியில் கலந்து கொண்டு இரண்டாம் பரிசாக ரூபாய் 750/- ம் சான்றிதழும் பெற்றார்.
31.01.2016 அன்று காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய பேச்சுப் போட்டி யில் நமது கல்லூரி மாணவி வெ. பத்மராகவி, முதுகலை முதலாமாண்டு கணிதம் அவர்கள் ஊக்கப்பரிசாக ரூபாய் 750/- ம் சான்றிதழும் பெற்றார்.
காமராஜர் பிறந்தநாள் சார்பாக தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் கல்லூரியில் 15.07.2017 அன்று நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நம் கல்லூரி மாணவி மு. கமலாதேவி இரண்டாம் பரிசையும், சான்றிதழையும், பட்டயத்தையும் பெற்றார். இப்போட்டியில் மூன்றாம் பரிசையும் பட்டயத்துடன் கூடிய சான்றிதழையும் முதலாமாண்டு கணிதத்துறை மாணவி ந. சுகாசினி பெற்றுள்ளார்.
தமிழ் வளர்ச்சித்துறை நடத்திய 2017-18 ஆண்டிற்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்யில் முதலாமாண்டு விலங்கியல் துறையை சார்ந்த மு. ஆனந்த பிரியா இரண்டாம் பரிசாக ரூபாய் 7,000/- ரொக்கத்தையும் சான்றிதழையும் பெற்றார்.
ராஜபாளையம் திருவள்ளுவர் மன்றம் நடத்திய போட்டியில் நம் மாணவியர் திருக்குறள் தேர்வினை எழுதினர். அத்தேர்வில் சிவகங்கை மாவட்டக் கல்லூரிகளில் சிறந்த மதிப்பெண் பெற்றமைக்காக இளங்கலை மூன்றாமாண்டு விலங்கியல் துறையை சார்ந்த அ. அடைக்கம்மை மற்றும் அதே துறையை சார்ந்த முதலாமாண்டு மாணவி ஆ. பிரசன்னாதேவி, இரண்டாமாண்டு வரலாற்றுத்துறை மாணவிகள் ர. ராகசுதா, வெ. ஜெயபிரித்திகா ஆகியோர் சான்றிதழுடன் பரிசும் பெற்றனர்.
அகத்திய மாமுனிவர் கலை இலக்கியப் பண்பாட்டு மையம் நடத்திய ஓவியம் மற்றும் கையெழுத்துப் போட்டியில் இருபத்து எட்டு மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் எட்டு பேர் சான்றிதழுடன் பதக்கமும் பெற்றனர்.
தமிழ் நாடு ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு தமிழ் வளர்ச்சி துறையால் சிவகங்கை மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு 29.06.2018 ஆம் நாள் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் நம் கல்லூரி இளங்கலை கணித மாணவி நா.சுகாசினி அவர்கள் முதல் பரிசாக ரூபாய் 5,000/- மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளார். மேலும் அது தொடர்பாக மாநில அளவில் நடைபெற்ற போட்டியிலும் கலந்து கொண்டு சான்றிதழ் பெற்றுள்ளார்.
முரசொலி அறக்கட்டளை சார்பாக மாவட்ட அளவில் நடைபெற்ற பாரதிதாசன் பாடல் ஒப்புவித்தல் போட்டியில் நம் கல்லூரியின் சார்பாக கலந்து கொண்டு ராம.பாரதி, இளங்கலை இரண்டாமாண்டு கணிதம் அவர்கள் மூன்றாம் பரிசாக ரூபாய் 2,000/- மும் சான்றிதழும் பெற்றுள்ளார். ஆறுதல் பரிசாக நா. சுகாசினி, இளங்கலை இரண்டாமாண்டு கணிதம் அவர்கள் ரூபாய் 1,500-ம் சான்றிதழும் பெற்றுள்ளார்.
கவியரசர் கலைத்தமிழ் சங்கத்தாரால் நடத்தப்பெற்ற போட்டிகளில் நம் மாணவியர் பங்கு பெற்று சான்றிதழ்கள் பெற்றுள்ளனர். நா. சுகாசினி, இளங்கலை இரண்டாமாண்டு, கணிதம் அவர்கள் கட்டுரைப் போட்டியில் ஐந்தாம் பரிசாக கேடயமும் சான்றிதழும் பெற்றுள்ளார். கவிதைப் போட்டியில் ராம பாரதி இளங்கலை இரண்டாமாண்டு கணிதம் அவர்கள் ஐந்தாம் பரிசாக கேடயமும் சான்றிதழும் பெற்றுள்ளார்.
திருவள்ளுவர் பண்பாட்டுக் கல்வி கழகம் சார்பாக நடைபெற்ற திருக்குறள் தேர்வில் நம் கல்லூரி மனைவியர் தேர்வு எழுதி சான்றிதழ் பெற்றுள்ளனர். செ. அபிதா இளங்கலை முதலாமாண்டு கணிதம் அவர்கள் இரண்டாம் பரிசும், ம. தனலெட்சுமி இளங்கலை முதலாமாண்டு அவர்கள் மூன்றாம் பரிசும், பா. சுப லெட்சுமி இளங்கலை இரண்டாமாண்டு கணிதம் அவர்கள் முதல் பரிசும் பெற்றுள்ளார்கள்.